
பார்த்து ரசித்தேன் சிலநேரம் !
பாராமல் தவித்தேன் பலநேரம் !!
பேசி சிரித்தாய் சிலநேரம் !
பேசாமல் வதைத்தாய் பலநேரம் !!
கனவில் நிலைத்தாய் சிலநேரம் !
கண்ணுறக்கம் கலைத்தாய் பலநேரம் !!
புனலாக குளிர்ந்தாய் சிலநேரம் !
தனலாக தகித்தாய் பலநேரம் !!
பூந்தென்றலாய் பூசினாய் சிலநேரம் !!
புயலாக வீசினாய் பலநேரம் !!
என்னுடல் தழுவினாய் சிலநேரம் !
என்னுயிர்விட்டு நழுவினாய் பலநேரம் !!
விழிகளில் நீ இருந்தாய் சிலநேரம் !
விழிகளில் நீர் இருந்தது பலநேரம் !!
செவ்வானில் சிறகடித்தேன் சிலநேரம் !
கண்ணீரில் நான் மிதந்தேன் பலநேரம் !!
முத்தத்தின் நுட்பம் அறிந்தேன் சிலநேரம் !
யுத்தத்தின் வெட்பம் உணர்ந்தேன் பலநேரம் !!
எனக்காக அழுதிருந்தேன் சிலநேரம் !
உனக்காக தொழுதிருந்தேன் பலநேரம் !!
உன் நினைவால் வாழ்கிறேன் சிலநேரம் !
உன் பிரிவால் வீழ்கிறேன் பலநேரம் !!
நானாக நானிருந்தேன் சிலநேரம் !
நீயாக வாழ்ந்திருந்தேன் பலநேரம் !!
உன்னோடு நானிருந்தேன் சிலகாலம் !
உனக்காக காத்திருப்பேன் பலகாலம் !!
பாராமல் தவித்தேன் பலநேரம் !!
பேசி சிரித்தாய் சிலநேரம் !
பேசாமல் வதைத்தாய் பலநேரம் !!
கனவில் நிலைத்தாய் சிலநேரம் !
கண்ணுறக்கம் கலைத்தாய் பலநேரம் !!
புனலாக குளிர்ந்தாய் சிலநேரம் !
தனலாக தகித்தாய் பலநேரம் !!
பூந்தென்றலாய் பூசினாய் சிலநேரம் !!
புயலாக வீசினாய் பலநேரம் !!
என்னுடல் தழுவினாய் சிலநேரம் !
என்னுயிர்விட்டு நழுவினாய் பலநேரம் !!
விழிகளில் நீ இருந்தாய் சிலநேரம் !
விழிகளில் நீர் இருந்தது பலநேரம் !!
செவ்வானில் சிறகடித்தேன் சிலநேரம் !
கண்ணீரில் நான் மிதந்தேன் பலநேரம் !!
முத்தத்தின் நுட்பம் அறிந்தேன் சிலநேரம் !
யுத்தத்தின் வெட்பம் உணர்ந்தேன் பலநேரம் !!
எனக்காக அழுதிருந்தேன் சிலநேரம் !
உனக்காக தொழுதிருந்தேன் பலநேரம் !!
உன் நினைவால் வாழ்கிறேன் சிலநேரம் !
உன் பிரிவால் வீழ்கிறேன் பலநேரம் !!
நானாக நானிருந்தேன் சிலநேரம் !
நீயாக வாழ்ந்திருந்தேன் பலநேரம் !!
உன்னோடு நானிருந்தேன் சிலகாலம் !
உனக்காக காத்திருப்பேன் பலகாலம் !!
mega arumaiyana yathartham
பதிலளிநீக்கு