
நாங்கள் வளர்ந்துவிட்டோம் !
நாகரிகத்தில் உயர்ந்துவிட்டோம் !
கவண் வீசி
கல்லெறிந்து
காட்டு விலங்கை
வேட்டையாடிய
காலமது கற்காலம் !
விமானம் மோதி
வெடிகுண்டு வீசி – மனித
உயிர் குடிக்கும்
உன்னத காலம் – இக்காலம் !
அன்றோ –
காலரா , அம்மையென
கொள்ளை நோய்கள்
கொண்டு சென்ற
மக்கள் உயிர் கணக்கு
சொல்லி மாளாது !
இன்றோ –
மனிதன் கண்டறிந்த
ஹைட்ரஜன் குண்டெறிந்தால்
பூமிதனில் – ஒரு
புல்பூண்டு மீளாது !
கோடிகோடியாய்
கொள்ளையடித்தும்
தர்மம் வெல்லும் – என
தத்துவம் பேசும்
அரசியல் கூத்து ஒருபுறம் !
உழைத்தும் பயனின்றி ,
ஒருவேளை உணவின்றி ,
குடும்பமே கொண்டவழி
தற்கொலைதான் என
பட்டினி சாவுகள் மறுபுறம் !
தொழிலுக்கேற்ப
சாதிமுறை
சொல்லிவைத்தது அக்காலம் !
ஜாதிக்கொன்றாய்
கட்சி கொண்டு - நாட்டு
ஒற்றுமைக்கு
கொள்ளிவைப்பது
இக்காலம் !
ஆயிரம் புத்தர் என்ன ?
அஹிம்சைசொன்ன காந்தி என்ன ?
காதுகளை தொலைத்துவிட்டோம் !
எல்லாம்வல்ல இறைவனையே
அல்லா , கிறிஸ்து , கிருஷ்ணன் என
மதத்திற்கொன்றாய்
பிரித்துவிட்டோம் !
மதம் கொண்டலையும்
மனித இனம்
நிதம் கொன்று தின்கிறது
தன் இனத்தை !
நாகரிக இமயத்தை
தொட்டுவிட்டபின்பும்
விட்டுவிடவில்லை
தன் மிருககுணத்தை !
அறிவின் முதிர்ச்சியில் ,
அறிவியல் வளர்ச்சியில் ,
அண்டத்தையே
அளந்துவிட்டோம் !
க்ளோனிங் மாடல் ,
குரோமோசோம் தேடல் - என
பிரம்மன் தொழிலையே
பிளந்து விட்டோம் !
நிலவின் நிறமறிந்து ,
செவ்வாயின் குணமறிந்து ,
சூரியனின் சுகமறியும்
விஞ்ஞானத்தில்
வளர்ந்துவிட்டோம் !
மனிதநேயம் மட்டும்தான்
மறந்துவிட்டோம் !
மனதின் அளவில் மட்டும்
மாறாமல் இருந்துவிட்டோம் !
புறவாழ்வில் புன்சிரிப்பு !
அகவாழ்வில்
சுகம்காணா தவிதவிப்பு !
தங்கம் வைரத்தை
தோண்டிப்பார்த்த
இரும்புமனம் -
இதயத்தை மட்டும்
எங்கும்
தேடிப்பார்க்கவில்லை !
அறிவின் வெளிச்சத்தில் ,
நாகரிக விளிம்பில்
நடைபோட்டாலும்
மனதில் இருள் மட்டும்
மண்டியே கிடக்கிறது !
பாலையாக தகிக்கும்
பாதை இதை
பனியாக குளிரச்செய்யும்
வசந்தம் ஒன்று
வருவது எப்போது ?
இருளகற்றும் பரிதியே !
எழுச்சியின் விடியலே !
எழுந்து வா ! விரைந்து வா !
எதிர்படும் இடர்யாவும்
கதிர்படும் பனியென
கரைந்து ஓடட்டும் !
துயர் தொலைத்து
மனித இனம்
மனம் நிறைய
மகிழ்ச்சி கீதம் பாடட்டும் !
நாகரிகத்தில் உயர்ந்துவிட்டோம் !
கவண் வீசி
கல்லெறிந்து
காட்டு விலங்கை
வேட்டையாடிய
காலமது கற்காலம் !
விமானம் மோதி
வெடிகுண்டு வீசி – மனித
உயிர் குடிக்கும்
உன்னத காலம் – இக்காலம் !
அன்றோ –
காலரா , அம்மையென
கொள்ளை நோய்கள்
கொண்டு சென்ற
மக்கள் உயிர் கணக்கு
சொல்லி மாளாது !
இன்றோ –
மனிதன் கண்டறிந்த
ஹைட்ரஜன் குண்டெறிந்தால்
பூமிதனில் – ஒரு
புல்பூண்டு மீளாது !
கோடிகோடியாய்
கொள்ளையடித்தும்
தர்மம் வெல்லும் – என
தத்துவம் பேசும்
அரசியல் கூத்து ஒருபுறம் !
உழைத்தும் பயனின்றி ,
ஒருவேளை உணவின்றி ,
குடும்பமே கொண்டவழி
தற்கொலைதான் என
பட்டினி சாவுகள் மறுபுறம் !
தொழிலுக்கேற்ப
சாதிமுறை
சொல்லிவைத்தது அக்காலம் !
ஜாதிக்கொன்றாய்
கட்சி கொண்டு - நாட்டு
ஒற்றுமைக்கு
கொள்ளிவைப்பது
இக்காலம் !
ஆயிரம் புத்தர் என்ன ?
அஹிம்சைசொன்ன காந்தி என்ன ?
காதுகளை தொலைத்துவிட்டோம் !
எல்லாம்வல்ல இறைவனையே
அல்லா , கிறிஸ்து , கிருஷ்ணன் என
மதத்திற்கொன்றாய்
பிரித்துவிட்டோம் !
மதம் கொண்டலையும்
மனித இனம்
நிதம் கொன்று தின்கிறது
தன் இனத்தை !
நாகரிக இமயத்தை
தொட்டுவிட்டபின்பும்
விட்டுவிடவில்லை
தன் மிருககுணத்தை !
அறிவின் முதிர்ச்சியில் ,
அறிவியல் வளர்ச்சியில் ,
அண்டத்தையே
அளந்துவிட்டோம் !
க்ளோனிங் மாடல் ,
குரோமோசோம் தேடல் - என
பிரம்மன் தொழிலையே
பிளந்து விட்டோம் !
நிலவின் நிறமறிந்து ,
செவ்வாயின் குணமறிந்து ,
சூரியனின் சுகமறியும்
விஞ்ஞானத்தில்
வளர்ந்துவிட்டோம் !
மனிதநேயம் மட்டும்தான்
மறந்துவிட்டோம் !
மனதின் அளவில் மட்டும்
மாறாமல் இருந்துவிட்டோம் !
புறவாழ்வில் புன்சிரிப்பு !
அகவாழ்வில்
சுகம்காணா தவிதவிப்பு !
தங்கம் வைரத்தை
தோண்டிப்பார்த்த
இரும்புமனம் -
இதயத்தை மட்டும்
எங்கும்
தேடிப்பார்க்கவில்லை !
அறிவின் வெளிச்சத்தில் ,
நாகரிக விளிம்பில்
நடைபோட்டாலும்
மனதில் இருள் மட்டும்
மண்டியே கிடக்கிறது !
பாலையாக தகிக்கும்
பாதை இதை
பனியாக குளிரச்செய்யும்
வசந்தம் ஒன்று
வருவது எப்போது ?
இருளகற்றும் பரிதியே !
எழுச்சியின் விடியலே !
எழுந்து வா ! விரைந்து வா !
எதிர்படும் இடர்யாவும்
கதிர்படும் பனியென
கரைந்து ஓடட்டும் !
துயர் தொலைத்து
மனித இனம்
மனம் நிறைய
மகிழ்ச்சி கீதம் பாடட்டும் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக